Tuesday 24 April 2018

அருமைத்தோழர்களே !
வணக்கம்.
மாவட்ட செயலர், மாவட்ட தலைவர் , துணைத்தலைவர் மற்றும் துணைசசெயலர் ஆகியோர் Director Finance திரு ராஜகோபால் அவர்களை சந்தித்து நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.மெடிக்கல் அலவன்ஸ் தாமதம் , மெடிக்கல் பில் பண பட்டுவாடா , Pre 2000 ஓய்வூதியர் ஓய்வூதியம் fixationபிரச்சினையும் விவாதத்திற்கு வந்தது. Director அவர்கள் மெடிக்கல் அலவன்ஸ் 2013 வரை போடப்பட்டு விட்டது . 2000 - 2006 வரை Software சிக்கல் காரணமாக போட இயலவில்லை என தெரிவித்தார்கள் போடப்பட்ட மெடிக்கல் அலவன்ஸ் லிஸ்டை நாம் கோரினோம். ஆனால் நிர்வாகம் தன் இயலாமையை தெரிவித்தது.
செயலர் லிஸ்ட் கையில் கிடைக்குமாயின் எங்கள் சங்கமே உறுப்பினர்களுக்கு தகுந்த ஆலோசனையும் காலதாமதத்திற்கான காரணத்தையும் சொல்லி நிர்வாகத்திற்கு உதவி செய்யலாமென்றார். ஓய்வூதியர்கள் பலர் இது குறித்து தம் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நிர்வாகத்தை அணுகுகிறார்கள் இது சில சமயம் அதிகாரிகளுக்கு இடைஞ்சலாகவும் இருக்கலாம்.
அதே போல 2000 க்கு முன்னால் ஒய்வு பெற்ற சுமார் 155 பேர்கள் உள்ளவர்கள் விபரங்களை DOT இடமிருந்து பெற்று கொடுத்து விட்டோம். இன்னும் 10,20 ஓய்வூதியர்களுக்கு போடப்படவில்லை. வயதான முன்னாள் நம் மூத்த தோழர்களுக்கு குறிப்பாக மானிடர்களுக்கு ஓய்வூதிய ரிவிஷன் மிகவும் அத்தியாவசியமாக உள்ளது.
3% increment கோவை மாவட்டத்தில் 5,6 பேர்களுக்கு ssa விலிருந்து DOT க்கு அனுப்பப்பட்டு விட்டது. அண்ணாதுரை , உதயகுமார் ,பாலசுப்ரமணியன், அருணாசலம் போன்றவர்களுக்கு DOT ரிவிஷன் செய்து ஓய்வூதிய பயன் கிடைக்க செய்ய வேண்டும். 78.2 நிலுவைத்தொகை இன்னமும் சிலருக்கு வரவில்லை.குறிப்பாக சந்திராமுருகன் SBI  கோவை, ராஜேஸ்வரி MTP , கமலம்மாள் SBI கோவை, வெங்கடராமன் கனரா வங்கி PCK போன்றவர்களுக்கு வரவில்லை. DOT யிலிருந்து வந்து விட்டதா , வங்கி CPPC போடவில்லையா என்பது கண்டுபிடிக்கமுடியாத மர்மமாக உள்ளது.ராமநாதன் JTO  ஒய்வு இந்திரா கோவை போன்றவர்களின் கோப்புகள் இங்கேயே தங்கிவிட்டபடியால் 78. 2 நிலுவை போட இயலவில்லை.தற்போது கோப்புகள் DOT க்கு அனுப்பப்பட்டு விட்டது.
தோழர்களே ஒய்வு பெற்ற நம் சங்க உறுப்பினர்கள் admin உடன் செயல்படுவது மிகக் கடுமையாக உள்ளது. Grievance day அனுமதி கேட்டும் காலந்தாழ்த்தியே வழங்குகிறார்கள்.அந்த கூட்டத்திற்கு சம்பத்தப்பட்ட கணக்கு அதிகாரி வரவில்லை. உதாரணத்திற்கு தோழர் மோஹனன் , DOT அவர் PPO கொடுத்தாகி  விட்டது.கிராஜூடி உத்தரவு வங்கிக்கு அனுப்பி விட்டனர். ஆனால் ஒண்ணரை மாதமாகியும் வங்கிக்கு PPO BOOK வரவில்லை . தோழர் பாவம் அணலிடை புழுவாய்த்துடிக்கிறார்.
பிரச்சினைகளை சுமுகமாக விட்டுக்கொடுத்து தான் தீர்க்க வேண்டியுள்ளது.நிர்வாகத்திலும், CPPC மற்றும் DOT பகுதிகளில் கடுமையான ஆள் பற்றாக்குறை . பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு நம் விளக்கம் திருப்திகரமாக இல்லை. 
மெடிக்கல் அலவன்ஸ் பெற கோவை மாவட்டத்தில் நம் தோழர்/தோழியர்கள் Spouse பணியில் இருந்தால் NOC அந்த இலாகாவிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் TNEB ,Agri இலாகா .LIC  மாநில போக்குவரத்து ஆகிய துறைகளில் கொடுக்க மறுக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் இதே நிலைமை உள்ளதா என்று தெரியவில்லை. மாநில செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலர் இந்த பிரச்சினையைக்கவனத்திற்கு கொண்டு வந்தார் ஆனால் தகவல் எதுவும் தரப்படவில்லை.
நம் மாநில அலுவலகத்திலிருந்து ERP யில் மருத்துவ அலவன்ஸ் போடப்படுகிறது அது சில பல காரணங்களால் திரும்ப அனுப்பப்படுகின்றன  மெடிக்கல் அலவன்ஸ் , 78.2 நிலுவை வராதது, pre 2000 ஒய்வு பெற்றோருக்கு பட்டுவாடா செய்யப்படாதமை குறித்தும் CEC யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய அதாளத்திலும் இப்பிரச்சினை எடுக்கப்பட்ட உள்ளது.
Grievance day நடத்தப்படுவது பற்றியும், தேங்கியுள்ள பிரச்சினைகளை மாநில அளவில் எடுப்பதற்கும் , சென்னை STR  ல் விடுபட்டுப்போன 78.2 % நிலுவை கிடைக்கப்பெறாத தோழர்கள் தன்ராஜ், ஈஸ்வரன் , கிரிஜா சூப்பர் செல்வம் , புருஷோத்தமன் ஆகியோருக்கு விரைவில் கிடைக்க மாவட்ட சங்கம் பெரு முயற்சிகள் எடுத்து வருகிறது.
மாவட்ட சங்க இல்லத்திற்கு உதவிக்கு வரும் தோழர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. நேரம் வாய்க்கும் போது நம் தோழர்கள் வந்து உதவி கரம் நீட்ட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அகில இந்திய மாநாடு, ரூ 50/- நன்கொடை, சார்பாளர் தேர்வு மாநில மாநாட்டிற்கு சார்பாளர்கள் இன்ன பிற பிரச்சினைகளுக்காக மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் விரிவடைந்த கூட்டம் நடத்த தோழர்கள் ராமன் குட்டி , முத்தியாலு ஆகியவர்களை அழைத்து நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது  மே மாதம் செயற்குழு கூட்டமும் , மே  மாத இறுதியில் விரிவடைந்த கூட்டமும் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தப்படும்.
நாள்தோறும் நம் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணம் நம் சங்கத்தின் செயலாற்றும் திறனும் உங்களின் அரும் பணியுமே காரணம்.
நன்றி 
மீண்டும் சந்திப்போம்.
அருணாசலம்.
மாவட்ட செயலர்,
AIBSNLPWA  
கோவை மாவட்டம் 












No comments:

Post a Comment