Monday 9 October 2017

                                                             2
அன்புத் தோழர்களே, அருமைத் தோழியர்களே ,
அனைவருக்கும் தோழமை வணக்கம். தீபாவளி திருநாள் வேலைகளில் ஈடுபட்டு வரும் உங்களை மீண்டும் சந்திப்பதில் பேருவகை கொள்கிறேன்.
08-10-2017 நேற்று மாலை 7 மணியளவில் பொள்ளாச்சி தோழர் பால் மாணிக்கம் அவர்களின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலர்,மாநில உதவி செயலர் ஆகியோர் பொள்ளாச்சி சென்றோம் . பொள்ளாச்சி தொலைபேசியக மனமகிழ் மன்றத்தில் ஓய்வூதியர்கள் ஒன்று கூடினோம். கலந்து கொண்ட 25 பேர்களில் மூத்த தோழர் தண்டபாணி, தோழியர் சுசீலா சம்பூரணம் ஆகியோரும் அடங்குவர்.

மாவட்ட செயலர் சுமார் 1 மணி நேரம் 78.2% நிலுவைத்தொகை 2007 முதல் நமக்கு கிடைக்க வேண்டியது குறித்தும்,மெடிக்கல் அலவன்ஸ் கோவையில் தாமதமாவது குறித்தும் Extra Increment னால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குறித்தும்,Anomaly Case பற்றி சமீபத்தில் வந்துள்ள உத்தரவு பற்றியும் DOT இலாகாவே Pension வழங்குவதற்கு ஏதுவாக கேட்கப்பட்டுள்ள தகவல்களை ஒன்றிணைப்பது குறித்தும் மிக விரிவாக தெளிவாக பேசினார்.2000க்கு முன்பாக ஒய்வு பெற்றுள்ள ஓய்வூதியர்களுக்கு 50% ஓய்வூதியம் பெற கொடுக்கப்பட வேண்டிய விண்ணப்பத்தைப்பற்றியும் பேசினார்.
Medical Bill குறித்தும், மெடிக்கல் அலவன்ஸ் குறித்தும் Extra Increment குறித்தும் உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்பட்டது  தோழியர் பத்மா கனரா வங்கி மூலமாக ஓய்வூதியம் பெறுகிறார்  நிலுவைத்தொகை குறைவாக பெற்றதாக கூறினார். தோழியர் சம்பத் லட்சுமி ஓய்வூதியத்தில் வருமான வரை பிடித்தம் குறித்தும் பதில் அளிக்கப்பட்டது.
தோழர்களே செழுமையும் பெருமையும் வாய்ந்த பொள்ளாச்சியில் 68 போராட்டத்தில் கலந்து கொண்ட மூத்த தோழர்கள் 22 பேர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு பின்னர் அகில இந்திய சங்கத்தால் பிரச்சினை  தீர்க்கப்பட்டு  மீண்டும் பணியில் அமர்ந்த தொழிற்சங்க வரலாறு கொண்ட ஊர் பொள்ளாச்சி.நீண்ட நாட்கள் பொள்ளாச்சியில் பணியாற்றிய மாவட்ட செயலர் தோழர் அருணாசலம், பால் மாணிக்கம் தோழியர் விஜயலட்சுமி ,தோழர் R .திருவேங்கடசாமி.ஆகியோர் மிக அருமையாக உரையாற்றியதன் பலனாக மிக்க எழுச்சியுடன் 7 தோழர்கள் தம்மை ஆயுட்கால உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.மூத்த தோழியர்கள் சம்பத் லட்சுமி , சுசிலா சம்பூர்ணம் பத்மா , பத்மா சுந்தரம்  தோழர்கள் ராகவன் ,சசிகுமார் போன்றவர்கள் புதிய ஆயுட்கால உறுப்பினர்களாக நம் சங்கத்தில் சேர்ந்தனர். புதிய உறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.
தோழியர்கள் விஜயலட்சுமி, சம்பத் லட்சுமி தோழர்கள் பால்ராஜ் ஆகியோர் 78.2% நிலுவை பெற்றமைக்காக நன்கொடை அளித்தனர்.

இவ்வாறாக கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கோவையில் தோழியர் சந்திரவள்ளி ஜெகதீசன்  அவர்கள் ரூ 2000/- நன்கொடை தொகையினை தோழர் சிவக்குமாரிடம் அளித்துள்ளார்கள். அம்மட்டோ FNTO மூத்த தோழர் A.Y  .வெங்கடேஸ்வரன் ஆயுட்கால உறுப்பினராக இணைந்துள்ளார்.
தோழியர் சந்திரவள்ளி ஜெகதீசன் நன்கொடை அளித்தார் 


தோழர் ஜனார்தனன்  நன்கொடை வழங்கினார் 
பொள்ளாச்சியில் 2000க்கு முன்பாக ஒய்வு பெற்றஅறையும்  தோழர் வேங்கடசாமி மறைந்த தோழர்கள் கந்தசாமி ( முன்னாள் MP ), சிதம்பரம் , CK  சுப்ரமணியம் , மறைந்த தோழர் U N சுப்ரமணியம் ஆகியோர்களின் இல்லங்களுக்கு சென்று Pension Revision Form கொடுத்து அவர்களுக்கும் நிலுவைத்தொகை நிச்சயம் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தையும் அளித்து , அவர்கள் மன மகிழ்ச்சியுடன் நம் உறுப்பினர்களாக இணைவோம் என்ற உத்தரவாதத்துடன் பொள்ளாச்சி கூட்டம் இனிதாக முடிவடைந்தது.
உடுமலையில் 42 தோழர்கள், பொள்ளாச்சியில் 25 தோழர்கள் , ஆனைமலையில் 3, வால்பாறையில் 4 பல்லடத்தில் 3 தோழர்கள் உள்ளடக்கிய பகுதிகளுக்கு தொடர்புபடுத்தி சங்க செய்திகளை அவர்களுக்கு கொண்டுசேர்க்கவும் அவர்களின் பிரச்சினைகளை மாவட்ட சங்கத்திற்கு தெரியப்படுத்தவும் தோழர் பால்மாணிக்கம் ஒருங்கிணைப்பாளராக சங்கப்பணியாற்ற தானே முன் வந்துள்ளார் . அவரை பாராட்டுகிறோம். மேலும் மாவட்ட செயலாளர் மாதம் ஒருமுறை பொள்ளாச்சி பகுதியில் உள்ள நம் சங்கம் சேர்ந்த சேராத ஓய்வூதியர்களை அணுகி அவர்தம் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.
பொள்ளாச்சி அலுவலகத்தில் நம் சங்க கூட்டம் நடத்த அனுமதி வேண்டி தோழர் RT சென்றபோது பொள்ளாச்சி கோட்டப்பொறியாளர் திரு.நாகராஜன் அவர்கள் "" நீங்கள் தான் ஓய்வூதியர் அமைப்பிற்கு தூணாக இருந்து செயல்படுகிறீர்கள்.உங்களுக்கு அனுமதியை எப்படி மறுக்க முடியும்""  என்று மன நெகிழ்வுடன் கூறியது மனதுக்கு மகிழ்வளிப்பதாக இருந்தது.
தோழர்களே பொள்ளாச்சி ,திருப்பூர் ,பல்லடம், வால்பாறை போன்ற பகுதி ஓய்வூதியர்களுடன் பேசியபோது கனரா வங்கி , கார்பொரேஷன் வங்கி , பேங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் மூலம் 78.2% நிலுவைத்தொகை சரியாக வழங்கப்படவில்லை. விவரங்களைப்பெற பெங்களூர் , நாக்பூர்  நகர்களில் உள்ள CPPC களை தொடர்பு கொண்டால் சரியான விளக்கம் கொடுப்பதில்லை.உதாரணத்திற்கு பொள்ளாச்சி தோழியர் பத்மா அவர்களுக்கு  6 மாதம் ஆகியும் நிலுவைத்தொகை கிடைக்கப்பெறாமல் சென்ற வாரம் வந்தது.அந்த fixation -ல் அவர் வாங்கிக்கொண்டிருந்த பென்சனில் ரூ.1100/- கணக்கில் குறைத்து வரவு வைக்கப்பட்டுள்ளது. பெரிய நாயக்கன் பாளையம் மூத்த தோழர் வெங்கடராமன் அவர்களுக்கு Order வந்து 6 மாதமாகியும் நிலுவைத்தொகை கிடைக்க வில்லை.இந்த பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இவற்றை பென்ஷன் அதாலத்தில் முறைப்படுத்த வேண்டியது நம் கடமையாகும். நாளைக்கு பென்ஷன் Revision வந்தால் இந்த குளறுபடிகள் இன்னமும் அதிகமாகும்.எனவே நாம் மாதமொருமுறை பிரச்சினைகள் உள்ள பென்ஷன்தாரர்களை சங்க அலுவலகம் வரவழைத்து விவாதித்து நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் விடாமல் போராடி வெற்றிக்கனியை பெற்றுத்தரும் நம் சங்கத்திற்கு கட்சி, அரசியல் ,Cadre , வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து மக்களையும் ஒரு அணியில் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமாகும். ஓய்வூதியர்கள் எண்ணிக்கை கூடுவதால்  , பணியில் இருப்போர்களின் சங்கத்தை விட கவனமாகவும் , பொறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் பணியாற்ற வயதான இளைஞர்களான  நாம்  காலம் இட்ட கட்டளையாக எண்ணி உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாழ்க ஓய்வூதியர் ஒற்றுமை!                                   வளர்க AIBSNLPWA !!
தோழமை வாழ்த்துக்களுடன் 
பி அருணாசலம். 
மாவட்ட செயலர் .
பொள்ளாச்சியில் நடைபெற்ற ஓய்வூதியர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் 







No comments:

Post a Comment